Vivek Vani - விவேக வாணி - Tamil Monthly - ஜூலை 2019
Tamil | 54 pages | True PDF | 12.7 MB
Tamil | 54 pages | True PDF | 12.7 MB
அன்புள்ள வாசக நேயர்கட்கு
நமஸ்காரம்
விவேகவாணியின் ஜூலை – 2019 இதழ் சுந்தரமுர்த்தி நாயனார் கைலாசம் சென்றதைக் குறிக்கும் வண்ணம் அவருடைய புனித திருவுருவப் படத்தைத் தாங்கி வருகிறது. சிவபெருமானை நட்பு என்ற பக்தி யோகத்தால் தோழமை யோகத்தால் அவர் வழிபட்டார். கேரளத்தில் இருக்கும் தலம் தேவாரப் பாடல்களில் குறிப்பிடப்படும் ஒரே தலம் சுந்தரமுர்த்தி நாயனார். சேரமான் பெருமாள் நாயனாரைச் சந்தித்த திருஅஞ்சைக்களம் என்பது ஆகும். கொடுங்கல்லூர் நகரின் ஒரு பகுதியான சிவத்தலம் இது. கொடுங்கல்லூhல் விவேகானந்த கேந்திர வேத தரிசன மையம் பெரும் பணியாற்றி வருகிறது.
விவேகானந்த கேந்திரத்தின் பத்திரிக்கைகளுக்குப் புதிய சந்தா சேர்க்கும் தொடர் பணி கேந்திர நிறுவனர் மா. ஏக்நாத்ஐp ரானடே அவர்களின் நினைவு தினத்தை ஒட்டி ஆகஸ்ட் 22 நடைபெறுகிறது. கேந்திரப் பத்திரிக்கைகளுக்கு சந்தா செலுத்தி கேந்திரக் குடும்பத்தின் உறுப்பினராக அனைவரையும் அழைக்கிறோம்.
வாசகர்கள் வாழ்வில் நலன்கள் அனைத்தும் பெருகப் பிரார்த்திக்கிறோம.;